'தெறி' - டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,February 05 2016]

பெரும் எதிர்பார்ப்புடன் விஜய் ரசிகர்கள் காத்திருந்த 'தெறி' படத்தின் டீசர் இன்று அதிகாலை சரியாக 12 மணியளவில் ரிலீஸாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

'தெறி' படத்தின் 50 வினாடிகள் டீசரில் 'துப்பாக்கி' படத்தை அடுத்து விஜய்யின் அதிரடி ஆக்சன் படம் ஒன்று உருவாகியுள்ளது என்பது தெரிய வருகிறது. விஜய்யின் அதிரடி ஆக்சன் காட்சிகள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவர் நெருங்கிவிட்டதாக தெரிகிறது. 'டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' என்ற அனைவருக்கும் தெரிந்த குழந்தைகள் பாடலை பஞ்ச் வசனமாக வைத்த அட்லியின் புத்திசாலித்தனம் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் எடிட்டர் ரூபன் 50 வினாடிகள் டீசரில் பல ஷாட்களை இணைத்து ஒரு ஆக்சன் விருந்தாகவே விஜய் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கேற்றவாறு ஜி.வி.பிரகாஷின் பின்னணியும் அபாரமாக அமைந்துள்ளது. மேலும் 'தெறி' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்துடன் முற்றிலும் வித்தியாசமான இன்னொரு தோற்றத்திலும் விஜய் தோன்றும் காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளது. விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளாரா? அல்லது இரண்டு கெட்டப்புகளில் தோன்றுகிறாரா? என்ற கேள்விக்கு விடை படம் வெளிவந்த பின்னர்தான் தெரியவரும்.


மேலும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், ராதிகா என மூன்று முன்னணி நடிகைகள் நடித்திருந்தும் அவர்களுடை காட்சிகள் ஒன்றுகூட டீசரில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த டீசர் அல்லது டிரைலரில் இவர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்து வரும் தமிழ்ப்ப்புத்தாண்டு தினத்தில் காத்திருக்கின்றது என்பது மட்டும் இந்த டீசரின் மூலம் உறுதியாக தெரிய வருகிறது.

More News

'தெறி' படத்தில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் நாளை மறுநாள் ரிலீஸாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே...

மைக் டைசனுக்கு 'இறுதிச்சுற்று' தயாரிப்பாளர் எழுதிய நன்றிக்கடிதம்

கடந்த வாரம் ரிலீஸான மாதவனின் 'இறுதிச்சுற்று' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது...

ரகசிய போலீஸ் கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார்

அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

கமலுடன் இணைந்தது ரஜினி பட மெகா நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் மெகா நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ் என்பது அனைவரும் ...

தமிழில் உருவாகி வரும் இன்னொரு ரோட் மூவி'

சமீபத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான '10 எண்றதுக்குள்ள' படம் ஒரு ரோட் மூவியாக வெளிவந்தது...