அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இளையதளபதி

  • IndiaGlitz, [Friday,March 04 2016]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இசை வெளியீடு மட்டுமின்றி அடுத்தடுத்து விஜய் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


பாடல் வெளியீட்டை அடுத்து ஒருசில நாட்களில் விஜய் பாடிய பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளதாகவும், அதனையடுத்து மார்ச் இறுதியில் 'தெறி' படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் 'தெறி' படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்காக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் டீம் முழுவீச்சில் இரவுபகலாக பணிபுரிந்து வருவதாகவும் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

More News

விஜய்யின் 'தெறி'யில் இணைந்தார் டி.ஆர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வெளிவந்த அதிகாரபூர்வ செய்தியினை நாம் ஏற்கனவே பார்த்தோம்...

பூச்சிமுருகன் புகாருக்கு சரத்குமார் பதிலடி

நடிகர் சங்கத்தின் கணக்குகளை முழுவதுமாக ஒப்படைக்கவில்லை என்றும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்...

'தெறி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 13ஆம் தேதி அல்லது 20ஆம் தேதி ஆகிய இரு தினங்களில்...

விஜயகாந்துக்கு கார்த்திக் சொன்ன முக்கிய அறிவுரை

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் திவீரமாக இருந்து வருகின்றன...

'தெறி' ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் தெறி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மாபெரும் இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கியுள்ளது...