விஜய்-அட்லியை அடுத்து அஜித்-அட்லி இணைவார்களா?

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் 'தெறி 2' படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அஜித்தை அட்லி சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அஜித்தின் அடுத்த படத்தை அட்லிதான் இயக்கவுள்ளதாகவும் ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.
அஜித்தின் 57வது படமே இம்மாதம்தான் தொடங்கவுள்ளதால் அவருடைய அடுத்த படம் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று அஜித் தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது பிரமாண்டமான படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே அட்லியின் அடுத்த படத்தில் விஜய், அஜித் அல்லது இருவருமே இல்லையா? என்பது குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News