6 வருட சாதனையை முறியடித்தது 'தெறி'

  • IndiaGlitz, [Monday,April 18 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வசூலிலும் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.

அந்த வகையில் பிரிட்டனில் கடந்த ஆறு வருடங்களாக இருந்து வந்த வசூல் சாதனை ஒன்றை 'தெறி' தற்போது முறியடித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரஇறுதி நாட்களில் £277,918 வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை கடந்த ஆறு வருடங்களாக எந்த திரைப்படமும் முறியடிக்காத நிலையில் 'தெறி' திரைப்படம் £280,696 வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.'

தற்போது விஜய்யின் 'தெறி' திரைப்படம்தான் பிரிட்டனில் நம்பர் ஒன் வசூல் செய்த தமிழ் திரைப்படமாக திகழ்கிறது. இந்த சாதனை இன்னும் பல நாடுகளிலும் 'தெறி' நிகழ்த்த வேண்டும் என்றே விஜய் ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்களுடை விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நடிகை ராதிகா வாழ்த்து

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம்தேதி வரை பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறவுள்ளன....

கமலுடன் 11 வருடங்கள் கழித்து இணையும் கின்னஸ் சாதனையாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.....

'கபாலி'யின் முக்கிய பணி இன்றுமுதல் ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'மெட்ராஸ்' இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...

ஆரஞ்சு மிட்டாய்' நடிகருக்கு கிடைத்த நண்பர்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஷ்ணுவிஷால் நண்பர்களாக நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....

'வாஹா' டிராக்லிஸ்ட் வெளியீடு

விக்ரம்பிரபு, ரான்யாராய் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ள 'வாஹா' திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது....