புத்தாண்டில் பிறந்த நாள் கொண்டாடும் 'தெறி' பேபி.. அதற்குள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ‘தெறி’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மீனாவின் மகள் நைனிகா புத்தாண்டு தினத்தில் பிறந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தார். இதனையடுத்து அவர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது . மேலும் ‘தெறி’ படத்தில் சிறு குழந்தையாக இருந்த நைனிகா அதற்குள் நன்றாக வளர்ந்து டீன் ஏஜ் பெண் போல் ஆகிவிட்டதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மீனா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருப்பதாவது: உயரமாகப் பறக்கும் என் குழந்தைக்கு வானம் எல்லை. நீங்கள் எப்போதும் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும், உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை ஒளிர செய்ய வேண்டும். என் அன்புக்குரிய மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Fly high my baby, sky is not the limit. May you always shine like the sun and illuminate the lives of those around you. Happy birthday to the love of my life ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/0XBtc1HTKP
— Meena Sagar (@Actressmeena16) January 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com