கேளிக்கை வரி முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால்

  • IndiaGlitz, [Tuesday,October 10 2017]

தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்துள்ள கேளிக்கை வரி 10%ஐ நீக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என சமீபத்தில் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து கடந்த வாரம் எந்த புதிய திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை

இந்த நிலையில் இன்று விஷால் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்களை சந்தித்து பேசினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முதல்வரை சந்திக்கவுள்ளனர்.

இந்த நிலையில் கேளிக்கை வரி தொடர்பாக முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று சற்று முன் விஷால் திட்டவட்டமாக கூறியுள்ளார். விஷாலின் முடிவுக்கு தமிழகத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் தவிர மற்ற திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வரை சந்திக்கும்போதாவது இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து 'மெர்சல்' உள்பட தீபாவளி திரைப்படங்கள் வெளிவரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.