வேலைநிறுத்தம் எப்போது முடியும்? விஷால் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் வரலாறு காணாத வகையில் ஒரு மாதம் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுத்தம் வரையில் கட்டுக்கோப்பாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும் என கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்று மாலை தனியார் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால், 'திரையரங்கு உரிமையாளர்களிடையேயான பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்று வருவதால் இன்னும் மூன்று நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டுவிடும் என்றும், அதன்பின்னர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கின்றேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறினால் சினிமாத்துறையில் உள்ள அனைத்து பிரிவினர்களுக்கும் நன்மை கிடைக்கும்' என்று கூறினார்.
திரையரங்கு டிக்கெட்டை முழுவதுமாக ஆன்லைனில் கொண்டு வரவேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கை மட்டும் இழுபறியில் இருப்பதாகவும் இதுகுறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்று நம்பப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout