வேலைநிறுத்தம் எப்போது முடியும்? விஷால் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

தமிழ் திரையுலகில் வரலாறு காணாத வகையில் ஒரு மாதம் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை முதல் போஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுத்தம் வரையில் கட்டுக்கோப்பாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும் என கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று மாலை தனியார் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஷால், 'திரையரங்கு உரிமையாளர்களிடையேயான பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்று வருவதால் இன்னும் மூன்று நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் பேசி முடிக்கப்பட்டுவிடும் என்றும், அதன்பின்னர் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கின்றேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறினால் சினிமாத்துறையில் உள்ள அனைத்து பிரிவினர்களுக்கும் நன்மை கிடைக்கும்' என்று கூறினார்.

திரையரங்கு டிக்கெட்டை முழுவதுமாக ஆன்லைனில் கொண்டு வரவேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கை மட்டும் இழுபறியில் இருப்பதாகவும் இதுகுறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என்று நம்பப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

More News

பூமராங் படத்திற்காக அதர்வா எடுத்த வித்தியாசமான முயற்சி

ஆர்.கண்ணன் மற்றும் அதர்வா இணைந்து உருவாக்கியுள்ள 'பூமராங்' திரைப்படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

'நரகாசுரன்' படத்தில் இருந்து விலக தயார்! கவுதம் மேனனின் அதிரடி அறிக்கை

கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்', செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தாமதத்திற்கு இயக்குனர் கவுதம் மேனனே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதம் ஏன்? கவுதம் மேனன் மீது புகார்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

அப்ப காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் ப்ளீஸ்: நெட்டிசன்கள் கிண்டல்

காவிரி மேலாண்மை அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த சிலநாட்களாக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனர் மீது நடிகை கூறிய பாலியல் புகார்

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது காலங்காலமாக நடைபெற்று வந்தாலும், கடந்த சில வருடங்களாக நடிகைகள் இதனை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.