'சூது கவ்வும்' உள்பட மூன்று இரண்டாம் பாக திரைப்படங்கள்: பிரபல தயாரிப்பாளர் தகவல்

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாம் பாக திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', உள்பட விஐபி 2, ஜெய்ஹிந்த் 2, டார்லிங் 2, ஜித்தன் 2, கோ 2, மணல் கயிறு 2, புலன்விசாரணை 2, சென்னையில் ஓர் நாள் 2 ,மாரி 2, சண்டக்கோழி 2, உறியடி 2, தில்லுக்கு துட்டு 2 என சமீபத்தில் வெளியான இரண்டாம் பாக படங்கள் அதிகம்

இந்த நிலையில் தற்போது 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவி குமார், தான் தயாரித்த முந்தைய ஒருசில படங்களின் இரண்டாம் பாகங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக விஜய்சேதுபதியின் 'சூது கவ்வும்', விஷ்ணு விஷாலின் 'முண்டாசுப்பட்டி' மற்றும் அசோக் செல்வனின் 'தெகிடி' ஆகிய திரைப்படங்களை இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படங்கள் இரண்டாம் பாகங்கள் தயாரிக்கப்பட்டால் முதல் பாகத்தில் பணிபுரிந்த நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்களே பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

More News

திருமண வாழ்க்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: ஓவியா

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வரும் பெயர் ஓவியா. இந்த நிகழ்ச்சியால் ஓவியா அளவுக்கு இன்னும் யாரும் புகழ் பெறவில்லை

லாஸ்லியாவின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பாகத்திலும் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளர் நிச்சயம் இருப்பார். முதல் பாகத்தில் ஓவியா, இரண்டாம் பாகத்தில் ரித்விகா, தற்போதைய மூன்றாம் பாகத்தில்

சசிகுமாரின் 'நாடோடிகள் 2' படம் குறித்த சூப்பர் அப்டேட்

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய நாடோடிகள் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

பாக்ஸர்' பட ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்து வருத்தப்பட்டேன்: அருண்விஜய்

அருண்விஜய் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'பாக்ஸர்' திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியானது

பாட்டில்கேப் சேலஞ்சை வித்தியாசமாக செய்து காட்டிய தமிழ் கவர்ச்சி நடிகை 

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பாட்டில்கேப் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. காலால் பாட்டிலின் மூடியை மட்டும் எட்டி உதைத்து வெளியே தள்ள வேண்டும்