சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வதில் ஸ்ருதிஹாசனுக்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று முன் தினம் மதுரை விமான நிலையத்தில் ஒருசில மர்ம நபர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு கமல் ரசிகர்களே காரணம் என கூறப்படுகிறது. இந்த தகவலை கமல் மறுத்திருந்தபோதிலும், இந்த சம்பவத்தில் தனது ரசிகர்கள் ஈடுபட்டார்களா? என்பது குறித்து கமல் விசாரணை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் கோபப்பட்டு தாக்கும் அளவிற்கு கமல் அல்லது ஸ்ருதிஹாசன் குறித்து சிவகார்த்திகேயன் எவ்வித சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறவில்லை என்றும், இருப்பினும் இந்த தாக்குதலில் தன்னுடைய ரசிகர்கள் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விசாரணையை கமல் துவக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருந்ததாக நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்தும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயனுடன் நடிக்க சம்மதிப்பாரா? என்ற சந்தேகத்தையும் தற்போது பலர் சமூக இணையதளங்களில் கிளப்பி வருகின்றனர். இருப்பினும் கமல், ஸ்ருதிஹாசன் இருவருமே பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்பதால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments