பந்தை எச்சினால் தேய்ப்பது ஒன்றும் தவறில்லை- முன்னாள் கிரிக்கெட் வீரர் பொல்லாக் கருத்து!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் கிரிக்கெட் பந்துகளில் எச்சில் தேய்த்து பளபளப்பாக்க ஐசிசி தடை விதித்து உள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பொல்லாக், “கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்கு முன்பு 2 வாரம் தனிமைப்படுத்தப் படுவார்கள். உடலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என கண்காணிக்கப்படும். யாருக்கும் அறிகுறி இல்லையென்றால் பந்தை எச்சில் கொண்டு தேய்ப்பதில் ஆபத்து இல்லை” எனக் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.
இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 3 தொடர் போட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளைக் குறித்து தற்போது ஐசிசி வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறது. இந்தப் போட்டிகளில் பார்வையாளர்கள் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனா நோய்த்தொற்று உமிழ்நீர் மூலம் பரவுகிறது என்பதால் பந்தை உமிழ்நீர்க் கொண்டு தேய்ப்பதற்கு ஐசிசி தடை விதித்து உள்ளது. இந்தக் கருத்திற்கு வேகப் பந்து வீச்சாளர் வாசிம் ஜாபர் முதற்கொண்டு ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் பொல்லாக் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
வேகப்பந்து வீச்சாளர் வாசிம் ஜாபர், கிரிக்கெட் விளையாட்டில் பந்த சமநிலைப்படுத்துவதற்கு பல காலமாக எச்சில் வைத்து தேய்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தீடீர் தடை விதிக்கப்படுவது பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். போட்டிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானால் இந்த விதிமுறை தேவையற்றது என்று பொல்லாக் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். ஆப்பிரிக்க அணிக்காக பொல்லாக் 303 ஒருநாள் போட்டி மற்றும் 101 டெஸ்த் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout