நிறவெறிக்கு எந்த வேக்சினும் இல்ல… துவக்கத்திலேயே அதிரடி காட்டும் கமலா ஹாரீஸ்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில நாட்கள்தான் ஆகிறது. இந்நிலையில் நிறவெறிக்கு எந்த வேக்சினும் இல்லை, அதை நாம்தான் சரிசெய்தாக வேண்டும் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு எதிராக மறைமுகக் கருத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டியிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பேசிய கமலா ஹாரீஸ், நிறவெறிக்கு எதிராக எந்த வேக்சினும் கிடையாது. இதை ஒழக்க நாம்தான் பாடுபட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க-தெற்காசிய பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரீஸ் தன்னுடைய உரையில், ஜார்ஜ் பிளாய்ட், பிரியோன்னா டெய்லர் என இன்னும் எத்தனையோ பேர் நிறவெறியினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நம் குழந்தைகள் நாம் அனைவருமே சம நீதி என்பதற்காக போராட வேண்டும். ஜனநாயகக் கட்சி சட்டத்தின்கீழ் அனைவரும் சமம் என்ற கொள்ளையை மட்டுமே செயல்படுத்தும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் பெண் உரிமைக்காக போராடிய தலைவர்கள் மேரி சர்ச் டெரெல், மேரி மேக்லியாட் பெத்யூன், ஃபானி லூ ஹேமர், டயான் நேஷ், கான்ஸ்டன்ஸ் பேக்கர் மோட்லி மற்றும் ஷிர்லி கிரிஷோம் ஆகியோரது சிவில் விடுதலைக்கான போராட்டங்கள், கருத்துகள் நமக்குப் போதிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கர்களுக்காக அவர்கள் தோள்களில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். எந்த ஒரு பிராபல்யத்துக்கும் இடம் கொடுக்காமல் அவர்கள் போராடினர். ஊர்வலம் நடத்தினர். இவர்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானித்தவர்கள். இவர்கள்தான் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோரது ஒளிமிகுந்த தலைமைக்கு முன்னோடிகளாவார்கள் என்று அமெரிக்க மக்களுக்காக ஆப்பிரிக்கர்கள் பாடுபட்டதை எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அடுத்தவர்களுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் அர்த்தம் என்று என் தாயார் ஷியாமளா கோபாலன் எனக்குக் கற்றுக் கொடுத்தார். இன்றைய இரவில் அவர் இங்கு இருக்க வேண்டும் என்று என் மனம் கருதுகிறது. மேலேயிருந்து என்னை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னை என் அம்மா பெற்றபோது நான் உங்கள் முன்னிலையில் இந்த மேடையில் நின்று பேசுவேன் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு என்னை நிற்கவைத்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நெகிழ்ச்சிப் பொங்க பேசி அனைவரது மனதையும் கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments