சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்த வதந்தி: பி.ஆர்.ஓ விளக்கம்
- IndiaGlitz, [Sunday,November 22 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து அதன் பின் அதற்கு அவரது தரப்பினர் விளக்கமளித்து கொண்டிருப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் சற்று முன் சமூக வலை தளங்களில் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் இருப்பதாக வதந்திகள் பரவியது.
இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியுடன் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரஜினியின் பி.ஆர்.ஓ இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ரஜினிக்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் ரஜினி உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கும் நிலையில் ரஜினிக்கு காய்ச்சல் என்ற பரவிய தகவலால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் பிஆர்ஓவின் விளக்கத்தை அடுத்தே ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.