இந்த நாட்டில் மட்டும் முகக்கவசம் அணியத் தேவையே இல்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் முதன் முதலில் தலைகாட்டிய நாடான சீனா தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. கடந்த 13 நாட்களாகப் புதிய தொற்றுகள் எதுவும் இல்லாத நிலையில் அந்நாட்டின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தற்போது விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு வெளியே வரவேண்டும் என்ற கட்டாய விதிமுறையை அம்மாகாண சுகாதாரத்துறை தளர்த்தி இருக்கிறது. இதனால் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசத்தை அணிந்து கொண்டுதான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தலைக்காட்டத் தொடங்கிய கொரோனா கடந்த 7 மாதங்களில் உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்நிலையில் உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் அடிக்கடி புழங்கும் ஒருவார்த்தையாகவும் கொரோனா மாறியிருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க தனிநபர் இடைவெளி, முகக்கவசம், தனிநபர் பாதுகாப்பு எனப் பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்ள அனைத்து நாட்டு சுகாதார நிறுவனங்களும் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும் கொரோனாவின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாமல் பல பணக்கார நாடுகள்கூட திணறும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
உலகமே இப்படி அல்லாடிக் கொண்டிருக்கும்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு வுஹான் மாகாணத்தின் ஒரு பூங்காவில் வாட்டர் பூல் பார்டி வைத்து நூற்றுக் கணக்கான மக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளி இல்லாமல், முகக்கவசம் அணியாமல் மிகவும் மகிழ்ச்சியாக விருந்து வைத்துக் கொண்டாடியது போன்ற சில புகைப்படங்கள் வெளியாகி உலகத்தையே அதிர வைத்தது. அதைத்ததொடர்ந்து தற்போது பெய்ஜிங் மாகாணத்தின் சுகாதாரத்துறை பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என்ற கட்டாய விதிமுறையை முற்றிலும் விலக்கி இருக்கிறது. இதனால் சீனாவின் நடவடிக்கை குறித்து பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் தாறுமாறான கருத்துகளை பதிவிடவும் செய்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments