கார்த்தியின் கைதியும் 62 இரவுகளும்..

  • IndiaGlitz, [Saturday,May 18 2019]

கார்த்தி நடிப்பில் 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 62 நாட்களில் முடிந்துவிட்டது என்றும், 62 நாட்களில் ஒருநாள் கூட பகலில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை என்றும், அனைத்து நாட்களிலும் இரவில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார். கைதியாக கார்த்தி நடித்துள்ள இந்த படம் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களில் உருவானது என்றும் இந்த படத்தில் நாயகியே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.