போட்டியே இல்லாமல் வெளியாகின்றதா தளபதியின் 'பிகில்?

  • IndiaGlitz, [Sunday,August 18 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை கோர்ப்பு உள்ளிட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ஒரு பக்கம் இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வரும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழக உரிமை உட்பட உலகம் முழுவதும் அனைத்து ஏரியாக்களும் வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளில் 90 சதவீத திரையரங்குகள் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளன

இதனை அடுத்து வரும் தீபாவளி அன்று 'பிகில்' படத்துக்கு போட்டியாக எந்த படமும் வெளிவர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. முன்னதாக தனுஷின் 'பட்டாஸ்' மற்றும் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' ஆகிய திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டன. ஆனால் 'பிகில்' படத்திற்கு புக் ஆகியுள்ள தியேட்டரில் எண்ணிக்கையை பார்த்த பின்னர் இந்த இரண்டு திரைப்படங்களும் தீபாவளி ரேஸில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வருகின்றன. எனவே தீபாவளி அன்று தளபதியின் 'பிகில் திரைப்படம் போட்டியின்றி வெற்றி நடை போட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது