ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார்: பிரபல காங்கிரஸ் தலைவர்

  • IndiaGlitz, [Thursday,November 15 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பக்கம் தனது புதிய கட்சியின் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும், விரைவில் கட்சி அறிவிப்பு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ள நிலையில் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றும் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை என்றும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 'ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் என்பதால் அவரை பற்றி தனக்கு நன்கு தெரியும் என்றும், அவர் நிச்சயம் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்கு இருந்தால் 'அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டாம்' என்று அவருக்கு அறிவுரை கூறுவேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனை இணைப்பது குறித்து ராகுல்காந்தியும், ஸ்டாலினும் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்றும், கூட்டணியில் வருவதற்கு முன்னரே திமுக கூட்டணியை உடைத்து கொண்டு வாருங்கள் என்று சொல்வது சரியாக இருக்காது என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

இன்று முதல் தினமும் 6 மணிக்கு... விஜய்சேதுபதி முக்கிய அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.

'தளபதி 63' படத்தில் மீண்டும் ஒரு சர்ப்ரைஸ்

தளபதி விஜய் நடிக்கவுள்ள 63வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான்,

'தளபதி 63' படத்தின் முழு விபரம்

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ராகவா-ஓவியாவின் 'காஞ்சனா 3'  ரிலீஸ் தேதி அறிவிப்பு 

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வந்த 'காஞ்சனா  3' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வந்துள்ளது.

ரஜினி - அஜித் படங்களுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி 

ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள்  வரும் பொங்கல் திருநாளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கே தியேட்டர் போதுமா? என்பது கேள்விக்குறியே