தன் கணவரின் மரணத்தில் மர்மம் இருக்கு - சீரியல் நடிகை சாய் லட்சுமி

  • IndiaGlitz, [Friday,May 31 2024]

 

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் சாய் லட்சுமி அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,

தனது கணவர் ஒரு பிஸ்ன்ஸ் செய்ததாகவும் அது ஒரு கட்டத்தில் நஷ்டத்தில் முடிந்தது,பிறகு எனக்கும் அவருக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டன,சரியான புரிதல் இல்லை அவர் இறப்புக்கு பிறகு இப்போது வரை நான் அவரை நினைத்து ஏங்காத நாட்களே இல்லை என கூறியுள்ளார்.

அவரு இல்லாம என்னோட பெண் குழந்தையை வளர்க்க நான் பட்ட கஷ்டம் நிறையவே.அது மத்தவங்களுக்கு சொன்னாலும் புரியாது.என்னோட குழந்தையை படிக்க ஸ்கூல்ல சேர்க்கும்போது கூட என் புருஷனோட இறப்பு சான்றிதழ் என்கிட்டே இல்லை.அவர் மரணத்துல அதிக மர்மம் இருக்கு.அவரை பற்றி பேசினாலே எனக்கு அழுகை வரும்,மனுஷன் சீக்கிரமா இறந்து போய்ட்டாரு.

என் அப்பா அம்மாக்கு நான் மூன்றாவதாக பிறந்த ஒரு பெண் குழந்தை.அவங்க ஆண் குழந்தை எதிர்பார்தாங்க அது நடக்கலன்னு என்ன கர்பத்துலே கலைக்க பாத்தாங்க முடில நான் பொறந்துட்டேன்,என் அப்பா அம்மா இவங்க யாருகிட்டயும் கிடைக்காத அந்த அன்பு என்னோட புருஷன் ஒருத்தர் ஒட்டுமொத்தமாக கொடுத்தார்.இப்போ அவரு இல்லாத ஒரு வாழ்க்கைய நரகமாக வாழ்ந்துட்டு இருக்கேன்.

என் புருஷன ஒரு பார்ட்டில ட்ரிங்க்ஸ்ல பாய்சன் கலந்து கொடுத்து பின் மண்டையில அடிச்சி கொன்னுட்டாங்க அது எனக்கு அவர் இறந்து போய் 5 வருஷத்துக்கு அப்புறம் தெரிய வந்துச்சி.என்கிட்டே எல்லாத்தையும் மறைச்சிட்டாங்க.அவர் இறந்து போனதே எனக்கு ஏதோ ஒரு மூணாவது மனுஷங்களுக்கு தெரியுற மாதிரி தெரிய வந்துச்சி ,
சாய் லட்சுமி அவர்கள் பேசிய எமோஷனல் ஆன பதிவுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.