என்னுடைய கேரக்டரில் மிகப்பெரிய டுவிஸ்ட். ஜாக்கி ஷெராப்

  • IndiaGlitz, [Friday,July 01 2016]

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகி வந்த 'மாயவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். சந்தீப் கிஷான், லாவண்யா திரிபாதி நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார்.
இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், "இந்த படத்தில் நான் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளேன். ஆனால் என்னுடைய கேரக்டரில் ஒரு மிகப்பெரிய டுவிஸ்ட் உள்ளது' என்று கூறியுள்ளார். மேலும் இந்த கேரக்டரில் நடிக்க இயக்குனர் நடிகரை தேர்வு செய்யும்போது, 'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாதான் என்னை பரிந்துரை செய்தார்' என்றும் அவர் கூறினார்.
ஆரண்யா காண்டம்' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தனது கோச்சடையான் படத்திற்காக என்னை அணுகினார். அதன்பின்னர் என்னை வேறு எந்த தமிழ் இயக்குனர்களும் அழைக்கவில்லை என்றும் தமிழ் இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தந்தால் தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படத்தில் ஆஸ்கார் நாயகன்?

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின் 100வது படம் பாகுபலி', '2.0' படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

சியான் விக்ரமின் 'இருமுகன்' படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்

இர்னடு வித்தியாசமான வேடங்களில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசர் வெளியானது.

சசிகுமாரின் 'கிடாரி' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

'தாரை தப்பட்டை', வெற்றிவேல்' படங்களை அடுத்து சசிகுமார் நடிப்பில் பிரசாந்த் முருகேசன் இயக்கி வரும் 'கிடாரி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் 2 படங்களில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, மிஷ்கின் இயக்கும் படம் ஒன்றில் அறிமுகமாகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா தயாரிக்கும் அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்

கோலிவுட்டின் பிரபல நடிகரான சூர்யா, முதன்முதலில் '2D எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' என்ற படத்தை தயாரித்தார்....