வெற்றிடம் இருப்பது உண்மைதான், ரஜினி அதனை நிரப்புவார்: முன்னாள் திமுக அமைச்சர்

  • IndiaGlitz, [Thursday,November 14 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’தமிழகத்தில் ஆளுமையுள்ள, சரியான அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்றும், இன்னும் அதை யாரும் நிரப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்

ரஜினியின் இந்த கருத்தை வைத்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினியை இதுவரை நேரடியாக விமர்சனம் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட ரஜினியின் இந்த கருத்தை கண்டித்து ’தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது என்றும், ரஜினிகாந்த் ஒரு நடிகர்தான் என்றும் அவர் அரசியல்வாதி இல்லை என்பதால் அரசியல் வெற்றிடம் கொடுத்து பேச தகுதியற்றவர் என்றும் கூறியிருந்தார்

அதேபோல் திமுக தரப்பில் இருந்து துரைமுருகன் அவர்களும், தேமுதிக தரப்பில் இருந்து பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்று ரஜினிக்கு பதில் அளித்திருந்தனர்

இந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான முக அழகிரி இன்று அளித்த பேட்டியின் போது ’தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் கூறியுள்ளார்

அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிரப்பிவிட்டதாக திமுக தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

தலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பம்: ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தர்பார்'

கணவர் மீது புகார் அளித்த பிக்பாஸ் வின்னர்: போலீசார் அதிரடி நடவடிக்கை

பிக்பாஸ் இந்தி 4 நிகழ்ச்சியின் வின்னரும் நடிகையுமான ஸ்வேதா திவாரி, தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கொடுத்த புகாரின் அடிப்படிடையில்

ரஜினி, அஜித், விஜய், சூர்யா.... 'அசுரன்' வெற்றிக்கு பின் பிசியாகும் வெற்றிமாறன்

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் அபார வெற்றி இயக்குனர் வெற்றிமாறனை திரையுலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இந்த படம் குறித்து தன்னிடம் இரண்டு மணி நேரம் ஷாருக்கான் பேசியதாகவும்

எம்ஜிஆர் கேரக்டருக்காக அரவிந்தசாமியின் அசத்தல் மாற்றம்: வைரலாகும் புகைப்படம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும்

சிவகார்த்திகேயன் படங்களில் பணிபுரிந்த அப்பா-மகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தில் தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஷ்யாம் ஒரு பாடலை பாடியுள்ளார்.