வரப்போகிறது.. " SBI " ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க புதிய நடைமுறை..!

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி, ஏடிஎம்-கள் மூலம் பணம் எடுக்கப் புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ஏடிஎம்-கள் மூலம் பணம் எடுத்தலை ஒரு முறை கடவு எண் (OTP) கொண்டு செய்ய வழிவகை செய்யப்படும். முறையற்றப் பணம் எடுத்தலைத் தடுக்க இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாம்.

இது வரும் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று எஸ்பிஐ கூறியிருக்கிறது. இந்த புதிய ஓடிபி நடைமுறை மூலம், ஏடிஎம் பணம் எடுத்தலில் மேலும் ஒரு பாதுகாப்பு அம்சத்தை எஸ்பிஐ சேர்த்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏடிஎம்களில் போலியான பணப் பரிமாற்றங்களைத் தடுக்க இந்த புதிய நடைமுறையை, வரும் ஜனவரி 1 முதல் அமல் செய்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை வைத்து பணம் எடுத்தலை செய்யலாம். இதைத் தவிர பணம் எடுத்தலில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்யவில்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் எஸ்பிஐ ஏடிஎம்-களைத் தவிர வேறு வங்கி ஏடிஎம்-களில் அதிக பணம் எடுத்தால், இந்த புதிய நடைமுறை பொருந்தாது.

More News

நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்: நீதிமன்றத்தில் பரபரப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நித்தியானந்தாவை தேடி கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் போலீசார் ஒருபக்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது,

பெண்ணாக மாறி நண்பனை திருமணம் செய்தவர் வீதிக்கு வந்த துயரம்!

நண்பனின் ஆசையை பூர்த்தி செய்ய பெண்ணாக மாறி நண்பனையே திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் தற்போது திரிசங்கு நிலையில் தவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த அட்டகாசமான புத்தாண்டு பரிசு

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் பிப்ரவரிக்குள் முடிந்து விடும்

இளம்பெண்ணை கொலை செய்த கணவரும் கொழுந்தனாரும்.. டிக்டாக் அடிமையால் ஏற்பட்ட விளைவு

டிக்டாக் செயலி இளைஞர்கள் பலரை அடிமைப்படுத்தி வந்த நிலையில் இதனால் குடும்பத்தில் பல விபரீதங்கள் நடந்து வரும் சம்பவங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

குஷ்பு மகளின் கனவை நனவாக்கிய சூப்பர் ஸ்டார்..!

குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவுக்கு ரஜினியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டார்.