தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்து தொகுதி உடன்பாடு கையெழுத்தும் ஆகிவிட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்துவிட்டது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிகவை திமுக அணிக்கு கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இரு அணிகளின் ஆட்டத்தை ஒருசில கட்சிகள் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக கமல் கூறியிருப்பதை அரசியல் விமர்சகர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக, கமல்ஹாசனின் மநீம, சரத்குமாரின் அஇசமமுக, ஜிகே வாசனின் தமாக மற்றும் திமுக கூட்டணியில் திருப்தியான தொகுதிகள் கிடைக்காவிட்டால் விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout