தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள், ஒன்று சிவகார்த்திகேயன், இன்னொன்று...: உதயநிதி

  • IndiaGlitz, [Saturday,May 07 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி கலந்து கொண்டார். அவர் பேசியபோது ’தமிழ் சினிமாவில் இரண்டு டான்கள் இருக்கிறார்கள் என்றும் ஒருவர் சிவகார்த்திகேயன் இன்னொருவர் அனிருத் என்றும் இருவரும் இணைந்து பணி புரிந்தாலும் தனித்தனியாக பணிபுரிந்தாலும் ஹிட்டாகிறதுது என்றும் பேசினார் .

மேலும் இந்த படத்தில் கல்லூரி போர்ஷன் மட்டுமின்றி ஸ்கூல் போர்ஷன் ஒன்று இருக்கிறது என்றும் அதில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவருமே மிக சிறப்பாக நடித்து உள்ளார்கள் என்றும் கூறினார்.

நான் பத்து நாட்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்தேன் என்றும் டாக்டர் படத்தைவிட இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று கூறிய உதயநிதி கடைசி அரைமணி நேரத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனி மிக அருமையாக நடித்து உள்ளார்கள் என்றும் இந்த படத்தின் பாடல்கள் வேற லெவலில் ஹிட்டாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டான்’ திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.