இந்தியாவில் 100- ஐ தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு!

  • IndiaGlitz, [Friday,December 17 2021]

இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகர், தமிழ்நாடு என 11 மாநிலங்களில் இந்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்தியச் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தென்ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் துவங்கிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் 11 மாநிலங்களில் இதுவரை பரவியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தத் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி கர்நாடகாவில் 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதையடுத்து மகாராஷ்டிராவில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா 8, தெலுங்கானா 8, குஜராத் 5, கேரளா 5 மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்குவங்க மாநிலத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இதுவரை 91 நாடுகளில் பரவியிருக்கிறது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் 27,042 பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 20 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக 10 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் 101 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

More News

முதலமைச்சரிடம் ஆசி பெற்ற சந்தானம்: கோரிக்கையை ஏற்று உறுதிமொழி அளித்ததாக தகவல்!

நடிகர் சந்தானம் சமீபத்தில் புதுவை முதல் அமைச்சரை சந்தித்து ஆசி பெற்ற நிலையில் அவருக்கு உறுதிமொழியை முதலமைச்சர் ரங்கசாமி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் பெயரில் போலி கணக்கு: வெரிஃபைடு கொடுத்த டுவிட்டரால் பரபரப்பு!

20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அழகி ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிலையில் அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைட் கொடுக்கப்பட்டுள்ளதால்

'ஸ்பைடர்மேன்' முதல் நாள் இந்திய வசூல் இத்தனை கோடியா?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஸ்பைடர்மேன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் இந்திய வசூல் இந்திய திரையுலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது

'வலிமை' திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்த

'மாநாடு' படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது