'மங்காத்தா' படக்காட்சியை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய தேனி காவல்துறை!
- IndiaGlitz, [Wednesday,April 29 2020]
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் தேனி மாவட்ட காவல் துறையினர் தங்களது சமூக வலைத்தளத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் காட்சி ஒன்றை பயன்படுத்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். அஜீத் நடித்த படம் ஒன்றில் ‘கொஞ்ச நாள் எல்லாரையும் அவங்கவங்க வீட்டுல ஓடி ஒளிய சொல்லுங்க’ என்ற வசனத்தை பதிவுசெய்து அதன்பின்னர் ‘மங்காத்தா’ படத்தில் அஜித் வீட்டில் ஓய்வு எடுப்பது போன்ற காட்சியையும் தேனி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் ’கொஞ்ச நாளைக்கு எல்லோரும் அவங்கவங்க வீட்டிலேயே இருங்க.. பயந்துட்டு இல்ல..! பாதுகாப்பாக இருக்க’ என்றும் அந்த டுவிட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கொஞ்ச நாளைக்கு எல்லோரும் அவங்கவங்க வீட்டிலேயே இருங்க.. பயந்துட்டு இல்ல..! பாதுகாப்பாக இருக்க..!@Premgiamaren#Thenidistrict #stayhome #szsocialmedia1 #Tnpolice pic.twitter.com/A4k06hxXH7
— Theni District Police (@socialmediathe2) April 29, 2020