காதல் ஜோடி கொலை வழக்கு: கொலையாளிக்கு தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
8 ஆண்டுகளுக்கு முன் காதல் ஜோடியை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்குதண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே கடந்த 2011ஆம் ஆண்டு கல்லூரி மாணவி கஸ்தூரியும் அவரது காதலர் எழில் முதல்வன் என்பவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், திவாகர் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில் கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் காதலர் இருவரையும் திவாகரன் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கு சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் இறுதியில் திவாகருக்கு தூக்குதண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திவாகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது,. சென்னை ஐகோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட், திவாகரனின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி ஏப்ரல் 22ஆம் தேதி திவாகரனுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படவிருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout