திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கையால் திரையுலகினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகள் உள்பட பொது இடங்களில் தடுப்பு ஊசியை செலுத்தாதவர்களை அனுமதிக்க கூடாது என தமிழக அரசின் சுகாதாரத்துறை நிபந்தனை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிபந்தனைக்கு திரையுலகினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் என்பதும் ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று கூட்டமொன்றில் பேசிய போதும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து மற்ற மாவட்ட கலெக்டர்களும் இதேபோன்று அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என்பதால் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.