தளபதி விஜய் இடத்தில் தனுஷ்! மிக விரைவில் ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் வெற்றி குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வசூலிலும், வரவேற்பிலும் சாதனை படத்தை இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது.

இந்த நிலையில் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தளபதியை அடுத்து தனுஷ் படத்தை தயாரிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ, ஆச்சரிய தகவல் மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனைநோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை நடித்து வருகிறார் என்பதும் இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.