தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

சில மாதங்களாகவே தமிழ் திரை உலகிற்கு போதாத காலம் ஏற்பட்டுள்ளது என்பது நடைபெற்றுவரும் அசம்பாவித சம்பவங்களில் இருந்து தெரிய வருகிறது. மாரடைப்பு காரணமாகவும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது. இதனை அடுத்து முரளி அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.