'இது நம்ம ஆளு' ரிலீஸ் உரிமையை பெறும் பிரபல நிறுவனம்?

  • IndiaGlitz, [Thursday,October 29 2015]

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் நிலை குறித்து நேற்று இயக்குனர் பாண்டியராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் பாடல்கள் வரும் நவம்பரிலும், டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பல வெற்றி படங்களை தயாரித்தும், விநியோகம் செய்த ராசியான நிறுவனம் என்று பெயரெடுத்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 'இது நம்ம ஆளு' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த நல்ல செய்தி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ள இந்த படத்தில் சிம்பு, நயன்தாராவுடன் சூரி, ஜெயப்பிரகாஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ப்ரவீண் படத்தொகுப்பு செய்துள்ளார்.

More News

நடிகர் விவேக் மகன் பிரசன்னா மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மகன் பிரசன்னா மூளைக்காய்ச்சலால் சற்று முன்னர் மரணம் அடைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்...

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி

'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' ஆகிய மூன்று ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ்...

'விஜய் 59' படத்திற்காக விஜய் பாடிய 'செல்லக்குட்டி' பாடல்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடித்த 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும்...

வேதாளம்: டிரைலருக்கு பதிலாக வெளியான டீசர்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என அஜீத் ரசிகர்கள்...

பிரபல இயக்குனர் சேரனின் முக்கிய அறிக்கை

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டாலும், தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர்...