இயக்குனர் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி திருட்டு!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

இயக்குனர் இமயம் பாரதிராஜா வீட்டில் ஒரு கிலோ வெள்ளி உள்பட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் வீடு சென்னை தி.நகர் கிருஷ்ணா தெருவில் உள்ளது. இவர் இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம்போல் இரவில் தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள தனது படுக்கை அறையில் தூங்கியுள்ளார். காலையில் கண் விழித்து பார்த்தபோது, வீட்டில் இருந்த தனது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன், பூஜை அறையில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிராஜாவின் வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் நபர்கள் மீதும் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் திருடன் பிடிபடுவான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

More News

பிரபல வெற்றிப்பட நடிகருக்கு ஆண் குழந்தை!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா விஜய்சேதுபதியின் படம்?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'சங்கத் தமிழன்' திரைப்படம் வரும் நவம்பர் இரண்டாம் வாரம் வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

'வலிமை' நாயகி நஸ்ரியாவா? அவரே அளித்த விளக்கம்!

அஜித் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படமான 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது 

'அசுரனை' அடுத்து அடுத்த ஹிட்டுகளுக்கு தயாராகும் தனுஷ்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் தீபாவளி திரைப்படங்களையும் தாண்டி வசூல் மழை பொழிந்து வரும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் '

'இந்தியன் 2' படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகளின் தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக