ஃபாஸ்டாக் முறையால் சில மணி நேரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட திருடுபோன கார்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த 15ம் தேதி முதல் ஃபாஸ்டாக் என்ற முறை அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த முறை அமல்படுத்தப்பட்ட உடன் வாகனங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் அந்த ஸ்டிக்கரில் உள்ள சென்சார் மூலம் சுங்கக்கட்டணம் வரவு வைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் அவ்வப்போது தேவைக்கேற்ப ஃபாஸ்டாக்கை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் காத்திருக்கும் நேரம் மற்றும் சில்லரை பிரச்சனையில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு விடுதலை கிடைத்தது
இந்த நிலையில் இந்த முறையால் திருட்டுப் போன காரை ஒரு சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்து செய்து தற்போது வெளிவந்துள்ளது. புனே பகுதியில் உள்ள ராஜேந்திர ஜாக்டேப் என்பவர் தன்னுடைய ஸ்கார்பி காரை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்று இருந்தார். அதன் பின்னர் ஒரு சில மணி நேரங்களில் அவருடைய மொபைலுக்கு உங்கள் ஒரு குறிப்பிட்ட சுங்கச் சாவடியை கடந்து விட்டதாகவும் அதற்காக ரூபாய் 35 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் எஸ்எம்எஸ் வந்தது
வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கூட சுங்கச்சாவடி கட்டணமா? என்று அதிர்ந்த ராஜேந்திர ஜாக்டேப் உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது தனது கார் திருடு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகார் மனுவை போலீசார் கேட்டுக் கொண்டிருந்த போதே அவருக்கு இன்னொரு எஸ்எம்எஸ் வந்தது. கார் இன்னொரு சுங்கச் சாவடியை கடந்து விட்டதால் அதற்கு ரூபாய் 40 கட்டணம் பெறப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட போலிசார் குறிப்பிட்ட சுங்கச் சாவடி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் திருடுபோன பார் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் காரைத் திருடிய மர்ம நபர்கள் மாயமாகி விட்டதாகவும் அவர்களை தேடும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout