'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவின் அவசர செய்தி
- IndiaGlitz, [Monday,November 27 2017]
சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை குற்றப்பரம்பரை என்று கூறுவதாக ஒருசிலரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து 'தீரம் அதிகாரம் ஒன்று' படக்குழுவினர் ஒரு அவசர செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப்படத்தில் காட்டப்படவிலலை
இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாக கருதுவதால் அதற்காக 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்வதோடு வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இடம்பெறும் குற்றப்பரம்பரை புத்தகம் மங்கலாக்கப்படும்(blur) என தெரிவித்து கொள்கிறோம்