'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவின் அவசர செய்தி

  • IndiaGlitz, [Monday,November 27 2017]

சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை குற்றப்பரம்பரை என்று கூறுவதாக ஒருசிலரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து 'தீரம் அதிகாரம் ஒன்று' படக்குழுவினர் ஒரு அவசர செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப்படத்தில் காட்டப்படவிலலை

இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாக கருதுவதால் அதற்காக 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்வதோடு வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இடம்பெறும் குற்றப்பரம்பரை புத்தகம் மங்கலாக்கப்படும்(blur) என தெரிவித்து கொள்கிறோம்

More News

சிம்புவின் இமேஜை உச்சத்திற்கு கொண்டு சென்ற 'தொட்றா'

சிம்பு என்றாலே சர்ச்சையும் சண்டையும் தான் என்பது கோலிவுட் திரையுலகினர்களின் பார்வை. இப்போதுகூட அவர் மணிரத்னம் படத்தில் இருக்கின்றாரா? இல்லையா? என்ற குழப்பம் கோலிவுட் திரையுலகினர்களிடையே உள்ளது.

ஐபோன், ஐபேடை விட முக்கியமானது இது: 'தீரன்' விழாவில் கார்த்தி பேச்சு

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் எதிர்பார்த்ததைவிட அதிக வசூலையும் பாராட்டையும் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது

இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ கல்லூரி மாணவி இவர்தான்

மூன்றாம் பாலினத்தவர்களாகிய திருநங்கைகள் தற்போது ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வரும் நிலையில் இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவக்கல்லூரி மாணவி என்ற பெருமையை

'தளபதி 62' படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரூ.250 கோடிக்கும் மேல் வசூலாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

பிரபஞ்ச அழகி பட்டம் கிடைக்க காரணமான கேள்வி எது தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த 20 வயது மருத்துவ கல்லூரி மாணவி மனுஷி சில்லார் சமீபத்தில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் உலக அழகி பட்டம் இந்திய அழகி