ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் கொடுத்திருக்காங்க: ரேணிகுண்டா நடிகரின் வீடியோ

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். வீட்டு வாடகை, சாப்பாடு போன்றவற்றுக்காக பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் நலிந்த நடிகர்களுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும், நடிகர்களும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் உதவி பெற்ற ரேணிகுண்டா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த ‘தீப்பட்டி கணேசன்’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஒரு மாதத்திற்கு, வீட்டுக்கு தேவையான பொருட்களை கொடுத்திருக்காங்க. பிரேம்குமார், பூச்சி முருகன், விஷால், ஸ்ரீமன் ஆகியோர் மூலம் ஒரு மாதத்திற்கு, வீட்டுக்கு தேவையான பொருட்களை கொடுத்திருக்காங்க. ஸ்ரீமன் அவர்கள் என்னுடைய அக்கவுண்டில் பணம் போட்டுள்ளார். உதவி செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

More News

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள்!!!!

கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்களாகத் தான் இருக்கின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தின் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 25 பாசிட்டிவ் மட்டுமே, விரைவில் கொரோனாயில்லா மாநிலம்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 50க்கு மேல் இருந்து வந்தது என்பதும், ஒருசில  நாட்களில் 100க்கும் மேல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே

குற்றப்பரம்பரை கதையை படிக்கும் பிரபல இயக்குனர்: பாலா பாரதிராஜாவுக்கு போட்டியா?

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படமாக இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது

இதுவே ரொம்ப லேட்: பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தல அஜித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'பில்லா' படத்தின் ரீமேக் படமான 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய இரண்டு அஜித் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்பது தெரிந்ததே.