தியேட்டர் டிக்கெட் உயர்வு சரியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது திரையரங்கு கட்டணங்கள் ரூ.120ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. இதனால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் தற்போது வரும் திங்கள் முதல் திரையரங்க கட்டணங்கள் மேலும் உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.150 என்றும், அதற்கு ஜிஎஸ்டி ரூ.42 என்றும் உயர்ந்துள்ளது. இதனால் இனிமேல் கட்டணத்தின் தொகை ரூ.192 ஆகும். அதுமட்டுமின்றி ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால் அதற்கு தனியாக ரூ.30 ஆகும். எனவே ஒரு திரைப்படம் பார்க்க ரூ.222 ஆகும் நிலை ஏறப்ட்டுள்ளது.
மேலும் பார்க்கிங் கட்டணம், ஸ்னாக்ஸ் காபி, டீ செலவை சேர்த்தால் நபர் ஒன்றுக்கு ஒரு படம் பார்க்க குறைந்தது ரூ.300 ஆகும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் ரூ.1200 என்பது நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு சினிமா என்பது எட்டாக்கனியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டண விலையேற்றத்தால் பெரிய நடிகர்களின் படங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் நிலைமைதான் கேள்விக்குறியாகியுள்ளது. ரிலீஸ் ஆன அதேநாள் மாலையில் ஆன்லைன் பைரஸில் படம் வெளியாகும் நிலை இருக்கும்போது தியேட்டர் கட்டணத்தை அதிகரித்து கொண்டே போவது சரியா? என்று திரையரங்கு உரிமையாளர்களும் அரசும் சிந்திக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் ஒரு பொருளின் உற்பத்தி விலை ரூ.500 என்று இருந்தால் அதற்கு 10% லாபம் வைத்து ரூ.550க்கு விற்பனை செய்யலாம். அதே பொருளின் விலை ரூ.5000 என்று இருந்தால் ரூ.5500க்கு விற்கலாம். ஆனால் சினிமாவை பொருத்தவரையில் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்திற்கும், ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்திற்கு ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டுமாவது டிக்கெட் கட்டணங்களை குறைக்க முன்வருவது நல்லது என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout