அன்லாக் 3.0 நேரத்தில் தியேட்டர்களை திறக்க பரிந்துரை: ஆனால் என்னென்ன நிபந்தனைகள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகளை திறக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

முதலாவதாக திரையரங்கிற்குள் செல்லும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் தியேட்டர்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக மூலம் டிக்கெட்டுக்கள் வழங்க வேண்டும். என்ட்ரி மற்றும் எக்சிட் பகுதிகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க, போதுமான நேர இடைவெளியுடன் திரைப்படங்களை திரையிட வேண்டும்.

பார்வையாளர்கள் கட்டாயம் மாஸ்குகள் அணிய வேண்டும். பார்வையாளர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு இருக்கை இடைவெளி இருக்க வேண்டும். திரையரங்குகளில் 50 சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும் தியேட்டர் இருக்கைகள் சுத்திகரிக்கப்பட வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது இடத்தில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுடன் அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கலாம் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசு என்ன முடிவெடுக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் செய்த மிகப்பெரிய உதவி!

நடிகர், நடன இயக்குனர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் இந்த கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

டி.இமானின் வாழ்த்துக்களை பெற்ற 13 வயது பிரபலம்!

கேரளாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆதித்யா சுரேஷ் என்பவர் இந்த சின்ன வயதிலேயே பாடுவதில் திறமையுள்ளவர் என்பதும், அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது

தமிழகத்தில் இன்று 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை நெருங்கிய சென்னை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 5வது நாளாகவும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது

தல அஜித்துக்கு பாட்டு எழுதணும்: தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரின் ஆசை

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் என்ற புகழைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா என்பவர் தல அஜித் அவர்களின் படத்திற்கு அறிமுக பாடலை எழுத வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டுள்ளார் 

இந்தியாவின் கனவு நாயகன்… நினைவு தினம் இன்று!!!

இந்தியாவின் வல்லரசு கனவை இளைஞர்கள் மத்தியில் விதைத்த எழுச்சி நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.