close
Choose your channels

கமல் படம் வெளியாகும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும். இந்து மக்கள் கட்சி

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை செய்ய வலியுறுத்தி வரும் இந்து மக்கள் கட்சி, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினால் அவர் படம் வெளியாகும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும் என்று அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டு முன் நேற்று போராட்டம் நடத்திய பின்னர் இந்து மக்கள் கட்சியின் அமைப்பு நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

குட்டை பாவாடை அணிவது தவறு இல்லை என்றும் வீதியில் எத்தனை பேர் குட்டை பாவாடையுடன் அலைகிறார்கள் என்று பாருங்கள் என்றும் கமல்ஹாசன் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பேசி வருகிறார்.

திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கொடுப்பது போல் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும். அதில் ஆபாசமான நிகழ்ச்சிகளுக்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

இதேபோன்ற கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகளை நடத்தினால் திரைத்துறைக்கே அழிவுகாலம் ஏற்படும். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்துவதை நிறுத்தாவிட்டால் அவரது படங்கள் வெளியேகும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும்.

சூதாட்ட விடுதிகளில் உள்ளவர்களை போலீசார் கைது செய்வது போல் குரோர்பதி போன்ற சூதாட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் தொலைக்காட்சி அதிபர்களையும் கைது செய்ய வேண்டும்' என்று அந்த நிர்வாகி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment