ஏப்ரல் 30 வரை திரையரங்குகளை மூட உத்தரவு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,April 05 2021]

ஏப்ரல் 30 வரை திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனை அடுத்து மகாராஷ்டிரா அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி, ஞாயிறு முழு ஊரடங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தியேட்டர்கள், மால்கள், மார்க்கெட்டுகள், ரெஸ்டாரண்ட், ஆகியவையும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் ரிலீசுக்கு தயாராக பல படங்கள் இருக்கும் நிலையில் தியேட்டர்களை ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு இருப்பதால் கோடிக்கணக்கில் பணம் முடங்கியுள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு தகவலாகும். ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் நிலைமை சரியாகுமா? இதே நிலை தொடருமா என்ற அச்சத்தில் பாலிவுட் திரை உலகினர் உள்ளனர்

மேலும் கர்நாடக மாநிலத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு வருமா? என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது,