ஒரு திரைப்படம் பார்க்க எவ்வளவு செலவு ஆகும்?

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால் பெரிய நடிகர்கள் ஆதரவும், பொதுமக்கள் ஆதரவும் இல்லாததால் வேறு வழியின்றி வரிச்சுமையை டிக்கெட் கட்டணத்தில் உயர்த்த ஒப்புக்கொண்டு வேலைநிறுத்ததை வாபஸ் பெற்றுவிட்டதாக தெரிகிறது. நாளை முதல் திரையரங்கம் வழக்கம் போல் செயல்பட போகிறது. ஆனால் வழக்கம்போல் டிக்கெட் கட்டணம் இருக்காது. இனி ஒரு படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டுமானால் எவ்வளவு செலவு ஆகும் என்று பார்ப்போமா?
தியேட்டர் கட்டணம் :120
வரி : 33
ஆன்லைன் முன்பதிவு : 30
பார்க்கிங் கட்டணம் : 30
ஸ்னாக்ஸ் :100 (ஒரே ஒரு பாப்கார்ன் மட்டும் சாப்பிட்டால்)
மொத்தம் :313 ( ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் என்றால் 313 x 4 = 1252 ரூபாய்
3D படம் என்றால் 3D கண்ணாடிக்கு தனியாக ரூ.30 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு வருவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

More News

நாளை முதல் திரையரங்குகளின் புதிய டிக்கெட் கட்டணம்

'ஒரே நாடு ஒரே வரி' என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான் என்பதும் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியையும் சேர்த்து கட்ட வேண்டும் என்பதுதான் தலைவிதியாக உள்ளது என்பதும் தான் இன்றைய நிலையாக உள்ளது

தல அஜித்தின் விவேகம்' குறித்த முக்கிய புதிய தகவல்கள்

இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இயக்குனர் சிவா எடிட்டிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார்

விவசாயிகளுக்காக 'ஜோக்கர்' இயக்குனருடன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு சமூக பிரச்சனையின்போது அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு பாடல் கம்போஸ் செய்து அந்த பாடலை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வழக்கம்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரஜினியின் செல்பி வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது தெரிந்ததே.

திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை ஆகிய இரட்டை வரி விதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.