ஒரு திரைப்படம் பார்க்க எவ்வளவு செலவு ஆகும்?
- IndiaGlitz, [Thursday,July 06 2017]
ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால் பெரிய நடிகர்கள் ஆதரவும், பொதுமக்கள் ஆதரவும் இல்லாததால் வேறு வழியின்றி வரிச்சுமையை டிக்கெட் கட்டணத்தில் உயர்த்த ஒப்புக்கொண்டு வேலைநிறுத்ததை வாபஸ் பெற்றுவிட்டதாக தெரிகிறது. நாளை முதல் திரையரங்கம் வழக்கம் போல் செயல்பட போகிறது. ஆனால் வழக்கம்போல் டிக்கெட் கட்டணம் இருக்காது. இனி ஒரு படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டுமானால் எவ்வளவு செலவு ஆகும் என்று பார்ப்போமா?
தியேட்டர் கட்டணம் :120
வரி : 33
ஆன்லைன் முன்பதிவு : 30
பார்க்கிங் கட்டணம் : 30
ஸ்னாக்ஸ் :100 (ஒரே ஒரு பாப்கார்ன் மட்டும் சாப்பிட்டால்)
மொத்தம் :313 ( ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் என்றால் 313 x 4 = 1252 ரூபாய்
3D படம் என்றால் 3D கண்ணாடிக்கு தனியாக ரூ.30 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு வருவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்