தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கும் தேதி இதுவா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதி அளித்தது என்பதும் 50 சதவீத இருக்கைகளுடன் மாஸ்க் அணிந்த பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது இருப்பினும் தமிழக அரசு திரையரங்குகள் திறப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அக்டோபர் 30ஆம் தேதி சூர்யாவின் ‘சூரரை போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

காதல் மலர்ந்தது எப்படி? மனைவி மிஹீகா குறித்து ராணா!

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகர் ராணாவுக்கும் மீஹிகா என்பவருக்கும்

விஜய் பட நடிகையின் மகனை பாராட்டிய சோனு சூட்!

விஜய் ஜோதிகா நடித்த 'குஷி' திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை ஷில்பா ஷெட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குந்த்ரா என்பவரை திருமணம் செய்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திடீர் மாற்றமா? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி முதல் நாள் முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக அறந்தாங்கி நிஷா, அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோர்

கோவாவில் வனிதா-பீட்டர்பால்; வைரலாகும் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது என்பதும்

ஈழத்தமிழ் பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்: குவியும் பாராட்டு!

பிரபல இசையமைப்பாளர் டி இமான் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முக்கிய நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.