தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,October 31 2020]
தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது
நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்த போதிலும், மேலும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நீண்ட நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை தமிழக அரசால் ஏற்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி நவம்பர் 16தேதி முதல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
மேலும் நவம்பர் 10ஆம் தேதியில் இருந்து பூங்காக்களும் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது என்பதும், புறநகர் ரயில்சேவை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது