'மாஸ்டர்' பார்க்க வந்த ஏழைப்பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் தந்த இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் பார்க்க வந்த வயதான ஏழை பெண் ஒருவருக்கு திரையரங்கு ஊழியர் கொடுத்த இன்ப அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை பார்ப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு 120 ரூபாய் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகளுடன் டிக்கெட் கவுண்டரில் ஒரு பெண் டிக்கெட் எடுக்க கொடுத்தார். அவரைப் பார்த்த டிக்கெட் வழங்கும் திரையரங்கு ஊழியர் ’இந்த காசை எப்படி சேர்த்தீர்கள்? என்று கேட்க ’கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேர்ந்தேன், எனக்கு விஜய் படம் என்றால் ரொம்ப பிடிக்கும், அதனால் அவரை பார்ப்பதற்காக இந்த பணத்தை சேர்த்தேன். என்னுடைய கணவர் கண் தெரியாதவர். நான் மட்டுமே வேலை செய்து அவரை காப்பாற்றி வருகிறேன். விஜய் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக நான் வந்துள்ளேன்’ என்று கூறினார்.

விஜய் மீது அந்த பெண்ணுக்கு இருந்த அன்பை பார்த்தவுடன் அந்த திரையரங்கு ஊழியர் ’இந்த பணத்தை நீங்கள் கொள்ளுங்கள், உங்களுக்கு நான் இலவசமாகவே டிக்கெட் தருகிறேன், விஜய் அண்ணா படத்தை பாருங்கள்’ என்று கூறியவுடன் அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி கணக்கிலடங்காதவை என்பது குறிப்பிடத்தக்கது.

கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சேர்த்து வைத்த பணத்தை வைத்து ‘மாஸ்டர்’ படம் பார்க்க வந்த பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் தந்த இன்ப அதிர்ச்சி குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.