தியேட்டர்களில் ஒளிபரப்பாகிறதா ஐபிஎல் போட்டிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் பங்கு கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எட்டு அணிகளும் தற்போது துபாயில் பயிற்சி பெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க இம்முறை ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் தற்போது ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
ஐபிஎல் போட்டிகளை மட்டுமின்றி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளையும் திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் இன்றி இருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு இந்த அனுமதியை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை திரையரங்குகளில் வெளியிட மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com