ஓடிடியில் திரைப்படம் வெளியிட்டால் எங்களுக்கு பங்கு வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிட்டால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கு வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் சில தீர்மானங்களை இயற்றப்பட்டுள்ளன. அது குறித்து பின்வருமாறு.
* புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் திரையிட வேண்டும்.
* ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழிந்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.
* புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்கு தொகை கேட்க வேண்டும்.
* திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்கிற்கு அளிக்க வேண்டும்.
அரசுக்கு விடுத்த கோரிக்கைகள்
* திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
* திரையரங்குகள் வர்த்தகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
* மின்சார கட்டணங்கள், சொத்துவரி ஆகியவை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவணம் செய்ய வேண்டும்.
* ஏற்கனவே கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறு பரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com