உங்க பொண்ணு காதலிச்சு ஏமாத்திட்டா… 71/2 லட்சம் கொடுங்க… பெற்றோரிடம் கேட்ட இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விசித்திரத்திற்கு பஞ்சம் இல்லாத சமூக வலைத்தளங்களில் அவ்வபோது சில பதிவுகள் மேலும் வைரலாகி அது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் தனது காதலி ஏமாற்றிவிட்டு சென்றதால் அவளது பெற்றோருக்கு கடிதம் எழுதிய இளைஞர் ஒருவர், உங்க பொண்ணுக்கு செலவு செய்த பணத்தைத் திருப்பி கொடுக்கச் சொல்லுங்கள் எனப் பட்டியல் போட்டு கோரிக்கை வைத்திருக்கும் கடிதம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காதல் தோல்வியடைந்த இளைஞர்கள் பலரும் தவறான செய்கைகளுக்கு ஆளாகிவிடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் படு உஷாரான இளைஞர் ஒருவர், கடந்த 2016 -2021 வரை 5 வருடங்களாக உங்களது பெண்ணை காதலித்து வந்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். இதனால் கடந்த 5 வருடங்களாக அவளுக்கு செலவு செய்தத் தொகையான ரூ.721,400-யை திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் என மனஅழுத்தம் குறையும் எனப் பட்டியலிட்ட கடிதம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்தப் பட்டியலில் உடைகள், சிகை அலங்காரம், தொலைப்பேசிக் கட்டணங்கள், முகப்பூச்சுகள், வாசனைத் திரவியங்கள், பிரத்யேக வகுப்புகள், காதல் பரிசுகள், எரிபொருள் செலவுகள், வாகன உதிரிபாகங்கள், காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாகி புகையிலை பீடி, சிகரெட், சாராயம் குடித்தது என ஒட்டுமொத்தமாக ரூ. 721,400 எனச் செலவு கணக்கு சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர்.
காதல் தோல்வியால் யாரோ ஒருவர் செய்த இந்த வேலை தற்போது சோஷியல் மீடியாவில் கடும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த இளைஞர் யார், அவர் பணத்தைத் திரும்ப பெற்றுவிட்டாரா? என்று நெட்டிசன்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com