காதலிக்கு சர்பரைஸ் கொடுக்க நினைத்து வீட்டையே கொளுத்திய இளைஞர்!!! சுவாரசியத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்தின் தெற்கு யார்க்க்ஷர் மாகாணத்தின் அபேடலி பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த ஒரு இளைஞர் தனது காதலிக்கு சர்பரைஸ் கொடுத்து லவ் பிரபோஸ் செய்ய நினைத்திருக்கிறார். இதற்காக வீடு முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்து மெழுகுவர்த்திகளை ஏற்றி அரண்மனை போல மாற்றியிருக்கிறார். இதைப் பார்த்தால் அவள் கண்டிப்பாக எனது காதலை ஒப்புக்கொள்ளுவாள் என்ற சந்தோஷத்தில் அலுவலகத்தில் இருக்கும் காதலியை அழைத்து வர காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார் இளைஞர்.
அலுவலகத்தில் இருந்து திரும்பிய இளைஞனுக்குப் பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டு இருக்கிறது. காரணம் அவரது குடியிருப்பில் ஏகப்பட்ட தீயணைப்பு படையினர் தீவிரமாகத் தீயை அணைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த வீடும் தீக்கிரையாகிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போதிலும் தனது காதலியை நோக்கி நான் உன்னை காதலிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். ஒரு நிமடம் அதிர்ச்சி போன காதலி நானும் உன்னை காதலிக்கிறேன் எனப் பதில் கூறியிருக்கிறார். இச்சம்பவத்தைப் பார்த்த ஒட்டுமொத்த தீயணைப்புப் படையினரும் தீயைப்பற்றிக் கூட கவலைப்படாமல் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
பின்னர் தீயணைப்புப் படையினர் சார்பாக காதலர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர். தற்போது டிவிட்டர் பதிவில் யார்க்ஷரின் தீயணைப்புத்துறை இந்த சுவாரசியத் தகவலை பதிவிட்டிருக்கிறது. இந்தப் பதிவிற்கு நக்கல்பிடித்த ஒரு டிவிட்டர்வாசி “போதும் இதோடு நிறுத்திக்கொள்ளட்டும் அந்த இளைஞரை திருமணத்திற்கு அலங்காரம் செய்யவிட்டு விட வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com