பிரியாணி பிரியர்களே உஷார்.....! பிரியாணி சாப்பிட்டதால் கல்யாண மாப்பிள்ளை உயிரிழப்பு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அளவுக்கு அதிகமாக பிரியாணி சாப்பிட்ட இளைஞர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காரைக்காலில், தலதிருபெட் பகுதியில் கூலித்தொழில் செய்து வசித்து வருபவர் தான் சந்திரமோகன். பிரியாணி மேல் அலாதி பிரியம் கொண்ட இவர், தினமும் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இவருக்கும் விடுதியூரைச் சேர்ந்த பெண்ணுக்கும், வருகின்ற 26-ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. கல்யாண வேலைகள் தடபுடலாக நடக்க மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த மோகன், சம்பவத்தன்று அளவிற்கு அதிகமாக பிரியாணி சாப்பிட்டுள்ளார். இதன்பின்பு உறங்கிக்கொண்டிருந்த மோகனை, அவரது தாயார் எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அவர் இறந்தது பின்பு தான் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சந்திரமோகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அளவுக்கு அதிகமாக பிரியாணி சாப்பிட்டதால், உணவுக்குழல் மற்றும் மூச்சுக்குழலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com