வீடியோ காலில் ஆபாசமாகப் பேச்சு- பெண்ணிடம் பணத்தைப் பறிகொடுத்த வாலிபர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பயந்தரை பகுதியில் உள்ள இளைஞருக்கு ஒருவருக்கு ஒரு வீடியோ கால் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐடி துறையில் வேலைப் பார்க்கும் அந்த இளைஞர் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு வந்த வீடியோ காலை யாராக இருக்கும் என்ற சந்தேகத்துடன் இளைஞர் எடுத்துப் பேசியிருக்கிறார். மறுமுனையில் பேசியது ஒரு பெண். தொடக்கத்திலேயே கொஞ்சலாகப் பேசிய அந்த பெண்மணி தொடர்ந்து ஆபாசமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்.
இப்படி பல முறை தொடர்ந்து பேசிய பெண்மணியிடம் இளைஞரும் ஆர்வமாகப் பேசியிருக்கிறார். அப்போது ஆடையைக் களைந்து விட்டு தன்னிடம் பேசுமாறு பெண்மணி கோரிக்கை வைத்திருக்கிறார். இளைஞரும் ஆடையைக் களைந்து விட்டு வீடியோ காலில் பெண்மணியோடு ஆபாசப் பேச்சுகளைத் தொடர்ந்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்மணி ரூ.50 ஆயிரம் பணத்தை அனுப்பு இல்லாவிட்டால் உனுடைய வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி இளைஞருக்கு வீடியோவையும் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த இளைஞர் பெண்மணியை போனில் அழைத்து மிரட்டியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த பெண்மணி நான் சிபிஐ அதிகாரி. எனக்கு பணத்தை அனுப்பு, இல்லாவிட்டால் நான் வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியிருக்கிறார். பயந்துபோன இளைஞர் பெண்மணியின் வங்கிக் கணக்கில் 37 ஆயிரத்தை அனுப்பியிருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட பெண்மணி மீண்டும் சில நாட்கள் கழித்து இப்படியே மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார். நிலைமையை சமாளிக்க முடியாத இளைஞர் தற்போது போலீஸாரிடம் புகார் கொடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீஸார் பணக் கொள்ளையில் ஈடுபட்ட பெண்மணியைக் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com